Main Content

News Paper

20/10/2015

மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் பயிலும் 15 மாணவ, மாணவியர் நவராத்திரிவிழாவையொட்டி கடந்த 15-ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இசைநிகழ்ச்சி நடத்தினர். பலரின் பாராட்டைப் பெற்ற இந்தநிகழ்ச்சியை தியாகராஜர் கல்லூரி செயலர் கண்ணன் தியாகராஜன் ஏற்பாடுசெய்தார். தமிழசைஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் கு.ஞானசம்பந்தன், தமிழசை ஆய்வாளர் நா.மம்மது, கல்லூரி முதல்வர் மு.எயினி உட்பட பலர் பங்கேற்றனர்.

08/10/2015

"அறம் செய விரும்பு" என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுக்க பல்வேறு பணிகள்செயல்படுகின்றன. இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் நேரடியாகச் சென்று கள ஆய்வுகள்செய்து, தங்கள் மூலமாக நடைபெறும் உதவிகள் தகுதியானவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றனர். அதன்படி தன்னார்வலர் திரு.நாகராஜன், மதுரை தியாகராசர் கல்லூரியியில் ஒலி நூலகம்ஓன்றை அமைத்துத் தரவிரும்பினார். அதற்கு கல்லூரி நிர்வாகம் சம்மதித்து நூலகத்திலேயேஒரு பகுதியை இதற்கென ஒதுக்கித் தந்துள்ளனர். அங்கு இரண்டு கம்ப்யூட்டர்கள் மற்றும்உரியதுணைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அக்கருவிகள் மூலம் தரவிறக்கப்படும்ஒலிவடிவப் புத்தகங்களை விழித்திறனற்ற மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

08/10/2015

கல்லூரி மாணவர்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் "கல்லூரிச் சாலை" என்ற நிகழ்ச்சியை ஹலோ எப்.எம். நடத்தியது. 14 கல்லூரிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல் பரிசுத் தொகையான ரூ.25,000/-ஐ நம் கல்லூரி வென்றது. இப்பரிசை மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு.மணீஸ்வரராஜா வழங்கி பாராட்டினார்.

18/1/2016

Students of Thiagarajar College, Madurai, Receiving the Overall winner's trophy from A.K.Khaja Nazeemudeem, Secretary and Correspondent, Jammal Mohamed College